Breaking News

செம்மலையை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிவிட்டதாக முன்னாள் சபாநாயகர் தனபால் அறிவிப்பு..!

அட்மின் மீடியா
0

செம்மலையை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிவிட்டதாக முன்னாள் சபாநாயகர் தனபால் அறிவிப்பு..!



அதிமுகவில் இருந்து முன்னாள் சபாநாயகர் ப.தனபால் விலகியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், 

அதிமுகவில் இருந்து நான் விலகி நீண்ட நாட்கள் ஆகிறது. என்னை போன்றவர்களை புறக்கணித்ததால் அதிமுகவை இன்று மக்கள் புறக்கணித்துள்ளனர். அதிமுகவில் எனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை, அதிமுகவில் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள். தவெகவில் எனது மகன் அமைச்சராக இருப்பது மகிழ்ச்சி" என்று தனபால் தெரிவித்துள்ளார்.

தனபாலின் மகன் டி.லோகேஷ் தமிழ்செல்வன் த.வெ.க.வில் இணைந்து ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது டி.லோகேஷ் தமிழ்செல்வனுக்கும் த.வெ.க. அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback