அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 07.05.2026 முதல் பதிவு செய்யலாம். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
2026-2027 ம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் விருப்பப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்
SC/ST பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை.
ஒரு மாணவருக்கு ரூ.48/-
பதிவுக் கட்டணம் : ரூ.2/- மட்டும்
பதிவுக் கட்டணம் : ரூ.2/- மட்டும்
www.tngasa in இணையதளம் வழியாக விண்ணப்பம்
பதிவுசெய்யத் தொடங்கும் நாள்:- 07.05.2026
பதிவு செய்ய இறுதி நாள் :- 29.05.2026
விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை
Debit Card / Credit Card/Net Banking/UPI மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம்.
மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டுதல் தொடர்பான விவரங்களை www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
மாணவர்கள் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தைத் திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை 044-24343100 / 24342011 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.
Tags: தமிழக செய்திகள்
