Breaking News

சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி காலமானார்!

அட்மின் மீடியா
0

பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி சாலை விபத்தில் மரணம் 




தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வாகன விபத்தில் உயிரிழப்பு

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி உயிரிழந்தார். திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1998 ஆண்டு முதல் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார் ஆர்.பி.சௌத்ரி. ஆரம்பத்தில் இரண்டு திரைப்படம் மலையாளத்தில் தயாரித்தார். அதற்கு பிறகு 1990 ஆம் ஆண்டு புதுவசந்தம் படத்தை தயாரித்து தமிழில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் புதுவசந்தம், புரியாத புதிர், நாட்டாமை, சூரியவம்சம் என பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளார்.

நடிகர் ஜீவாவின் தந்தையான இவர், புது முகங்களுக்கு அதிக வாய்ப்பு கொடுப்பது புது இயக்குனருக்கு வாய்ப்பு கொடுப்பது என தனித்துவமான பாணியை பின்பற்றி பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூர் அவருடைய பூர்வீகம்.

அங்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை அங்கு சென்றபோது கடும் விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை (மே 6) அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback