தாமதமாகும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - எப்போது வெளியிடபடும் அரசுத் தேர்வுத்துறை விளக்கம் முழு விவரம்
அட்மின் மீடியா
0
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு எப்போது? - அரசுத் தேர்வுத்துறை விளக்கம் முழு விவரம்
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கான பிளஸ் 2 தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் நடந்தன. மொத் தம் 8.27 லட்சம் மாணவ மாணவியர், தேர்வு எழு தினர். விடைத்தாள் திருத் தும் பணி, ஏப்., 6 முதல் 20ம் தேதி வரை நடந்தது. பொதுத்தேர்வுகள் தேதி அறிவிப்பின் போதே, தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியிடப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.
இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தல் நடந்து, தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. புதிய ஆட்சி பதவியேற்பதில் இழுபறி நீடிக்கிறது. புதிய அரசு பதவியேற்ற பின், அரசிடம் அனுமதி பெற்று, தேர்வு முடிவுகளை வெளியிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக, நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகாது.
அரசுத் தேர்வுத் துறை இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் குறித்த விவரம் ஒரு நாளைக்கு முன்னதாகவே அனைவருக்கும் தகவல் அளிக்கப்படும்' என தெரிவித்துள்ளது.
இதன்படி பார்க்கும் போது, இன்று (வியாழக்கிழமை) தேர்வு முடிவு குறித்த முன்னறிவிப்பு வந்தால் மட்டுமே நாளை (வெள்ளிக்கிழமை) தேர்வு முடிவு வெளியிடப்படும். அப்படி இல்லையென்றால். தேர்வு முடிவு தள்ளிப்போகவே அதிகம் வாய்ப்புள்ளது.
Tags: தமிழக செய்திகள்
