இனி வாரத்தில் 2 நாட்கள் ஆன் - லைனில் வழக்கு விசாரணை – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு..! From now on, cases will be heard online 2 days a week – Supreme Court announces..!
இனி வாரத்தில் 2 நாட்கள் ஆன் - லைனில் வழக்கு விசாரணை – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு..! From now on, cases will be heard online 2 days a week – Supreme Court announces..!
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் எதிரொலியாக பிரதமர் நரேந்திர மோடி எரிபொருளை சேமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில், பிரதமரின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் தனது செயல்பாடுகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.
அதன்படி, திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இனி காணொளி வாயிலாக மட்டும்தான் வழக்கு விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தின் விசாரணை மற்றும் இதர பணிகள் காணொளி காட்சி மூலம் நடைபெறும் எனவும் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் காணொளி காட்சி மூலமும், நேரடியாகவும் என ஹைபிரிட் முறையில் நீதிமன்றப் பணிகள் நடைபெறும் எனவும் சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் நீதிமன்ற பணியாளர்களில் 50% பேர் தேவைக்கு ஏற்ப வீட்டிலிருந்து தங்களது பணியை மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்ற பதிவாளர் அறிவுறுத்தியுள்ளதோடு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஒன்றாக கார்களில் பயணிக்குமாறும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை தொடரும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்

