Breaking News

மீண்டும் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம் யார் யார் முழு விவரம் 11 IAS officers transferred again

அட்மின் மீடியா
0

மீண்டும் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம் யார் யார் முழு விவரம் 11 IAS officers transferred again


தமிழகத்தில் இன்று 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேளாண்துறை செயலாளராக பி.சங்கர், மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக பி.முருகேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக ஜி.லதா, வருவாய் நிர்வாக ஆணையராக காயத்ரி கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். 

வேளாண்துறை இயக்குநராக வி.முருகேஷ், மாநில மனித உரிமை ஆணைய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மீன்வளத்துறை இயக்குநர் முரளிதரன் வேளாண்துறை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொன்னேரி துணை ஆட்சியராக அப்துல் ரசாக் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் துணை ஆட்சியராக நல்லசிவன் நியமிக்கப்பட்டுள்லார். 

கரூர் மாவட்ட ஆட்சியராக சி.முத்துக்குமரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தகவல் தொழில்நுட்பத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கைத்தறி முதன்மைச் செயலாளராக டி.என். வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback