Breaking News

அனைத்து சிம் நிறுவனங்களும் டேட்டா இல்லாத ரீசார்ஜ் திட்டங்களை வழங்க TRAI பரிந்துரை

அட்மின் மீடியா
0

அனைத்து சிம் நிறுவனங்களும் டேட்டா இல்லாத ப்ளான்களை வழங்க TRAI பரிந்துரை

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI), சாதாரண பட்டன் போன்களைப் பயன்படுத்தும் எளிய மக்கள் பயன்பெறும் வகையில் புதிய வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இதன்படி, ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், விஐ (Vi) உள்ளிட்ட அனைத்து முன்னணி மொபைல் நிறுவனங்களும், ஒவ்வொரு ரீசார்ஜ் திட்டத்திலும் கட்டாயம் குரல் அழைப்பு (Voice Calls) மற்றும் குறுஞ்செய்தி (SMS) வசதிகளை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஸ்மார்ட்போன் வசதி இல்லாதவர்களுக்கும் அடிப்படைத் தகவல் தொடர்பு வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.தற்போதுள்ள பெரும்பாலான ரீசார்ஜ் திட்டங்கள் டேட்டாவுடன் (Internet Data) இணைந்தே வருவதால், இணையத்தைப் பயன்படுத்தாத சாதாரண மக்களும் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனை மாற்றும் விதமாக, டேட்டா இல்லாத பிரத்யேக ரீசார்ஜ் திட்டங்களைக் கட்டாயம் அறிமுகப்படுத்த வேண்டும் என டிராய் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 

இதன் மூலம் இணைய வசதி தேவைப்படாத பயனர்கள், மிகக் குறைந்த விலையில் தங்களுக்குத் தேவையான அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ் வசதிகளை மட்டும் பெற்றுக்கொள்ள முடியும்.இந்த அதிரடி மாற்றத்தால், குறிப்பாகக் கிராமப்புறங்களில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் பட்டன் போன் பயனர்களின் ரீசார்ஜ் செலவு கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback