Breaking News

எந்த கட்சியில் யார் யார் வேட்பு மனு நிராகரிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் மொத்தம் 7600 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வேட்புமனுக்கள் மீதான பரீசிலனை காலை 11 மணி முதல் தொடங்கியது. 234 தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பரீசீலிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆண்கள் 6217 வேட்பு மனுக்களும் பெண்கள் 1380 வேட்பாளர்களும் திருநங்கை 3 வேட்பாளர்களும் தாக்கல் செய்துள்ளனர்.




திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் புண்ணியவதியின் வேட்பு மனு நிராகரிப்பு முன்மொழிந்தவரின் பெயர்கள், விலாசங்கள் தவறாக இருந்ததாகக் கூறி நிராகரித்தார் தேர்தல் நடத்தும் அதிகாரி

சிதம்பரத்தில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் பாரி வேட்பு மனு எழுத்துப் பிழை மற்றும் முழுமையாக நிரப்ப வில்லை என்றும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனைவியின் சொத்து விவரம் உள்ளிட்டவற்றை முறையாக குறிப்பிடாததால் த.வெ.க. வேட்பாளர் டாக்டர் பாரி மனு நிராகரிப்பு; மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த டாக்டர் பாரியின் தந்தை நெடுஞ்செழியனின் மனு ஏற்பு

உத்திரமேரூர் தொகுதியில் ராமதாஸ் தரப்பு வேட்பாளர் சரளா ராஜ் என்பவரின் வேட்புமனு நிராகரிப்பு .முன்மொழிபவரின் கையொப்பம் இல்லாத காரணத்தால் வேட்புமனு நிராகரிப்பு என விளக்கம்

திருச்செங்கோடு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஹரிஷ் என்பவர் 25 வயதை எட்டாததால், அவரின் வேட்புமனுவானது தள்ளுபடி செய்யப்பட்டது

சத்திரிய சான்றோர் படை தலைவர் ஹரி நாடார் வேட்பு மனு, முகவர் அலெக்ஸ் நாடார் மூலம் ஆலங்குளம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வகையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஹரி நாடார் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹரி நாடார் சிறையில் இருந்து முகவர் மூலம் வேட்புமனு தாக்கல் செய்தது செல்லாது என தேர்தல் அலுவலர் கூறியுள்ளார்.

எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் தவெக வேட்பாளர் அருண்குமார் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback