Breaking News

பெரம்பூரில் பிழைகளைச் சரிசெய்து திருத்தப்பட்ட புதிய வேட்புமனு விஜய் சார்பில் தாக்கல்

அட்மின் மீடியா
0

பெரம்பூரில் பிழைகளைச் சரிசெய்து திருத்தப்பட்ட புதிய வேட்புமனு விஜய் சார்பில் தாக்கல் 

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அறிவித்த தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். 

நேற்று திருச்சி பாலக்கரை பகுதியியிலுள்ள மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விஜய் வழங்கினார்

இந்நிலையில் திருச்சி கிழக்கு வேட்பு மனுவில் இரண்டு குற்றவியல் வழக்குகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார் விஜய். 

அதேசமயம், பெரம்பூர் வேட்பு மனுவில் அதனைக் குறிப்பிடவில்லை. இதனை எதிர்க்கட்சிகள் காரணமாகக் காட்டினால், வேட்பு மனு நிராகரிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. 

பெரம்பூர் தொகுதியில் திருத்தப்பட்ட மனுவை மீண்டும் தாக்கல் செய்யலாம். மாறாக, பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த மனு விஜயால் திருத்தப்படாமல் போனால், அவர் வேட்புமனு நிராகரிக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் 

பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில் இருந்த வயது மற்றும் வழக்கு விவர முரண்பாடுகளைக் களைய, தவெக தலைவர் விஜய் இன்று கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்

மதுரை வழக்கு தொடர்பாக முறைப்படி சம்மன் எதுவும் வரவில்லை என்பதால் முந்தைய மனுவில் அது விடுபட்டது. தற்போது விவரங்கள் அறியப்பட்டவுடன், தேர்தல் ஆணைய விதிமுறைப்படி (ஏப்ரல் 6-க்குள் திருத்த அனுமதி உண்டு) கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் எந்த சட்டச் சிக்கலும் இல்லை என தவெக சட்டப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback