விஜயின் வேட்புமனுவில் சர்ச்சை - நிராகரிக்கப்பட வாய்ப்பு முழு விவரம் இதோ
திருச்சி கிழக்கு வேட்பு மனுவில் இரண்டு குற்றவியல் வழக்குகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார் விஜய். அதேசமயம், பெரம்பூர் வேட்பு மனுவில் அதனைக் குறிப்பிடவில்லை
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அறிவித்த தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார்.
நேற்று திருச்சி பாலக்கரை பகுதியியிலுள்ள மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விஜய் வழங்கினார்
இந்நிலையில் திருச்சி கிழக்கு வேட்பு மனுவில் இரண்டு குற்றவியல் வழக்குகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார் விஜய்.
அதேசமயம், பெரம்பூர் வேட்பு மனுவில் அதனைக் குறிப்பிடவில்லை. இதனை எதிர்க்கட்சிகள் காரணமாகக் காட்டினால், வேட்பு மனு நிராகரிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
பெரம்பூர் தொகுதியில் திருத்தப்பட்ட மனுவை மீண்டும் தாக்கல் செய்யலாம். மாறாக, பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த மனு விஜயால் திருத்தப்படாமல் போனால், அவர் வேட்புமனு நிராகரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு நான்கு செட் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். விஜய் இதுவரை பெரம்பூரில் இரண்டு செட் மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்துள்ளார். மீதமுள்ள இரண்டு செட்களில், மதுரை வழக்கை குறிப்பிட்டு சரியான தகவல்களுடன் புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தால் இந்த பிழையை சரிசெய்துவிடலாம் என்று கூறப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்
