சவுக்கு சங்கர் மீண்டும் கைது முழுவிவரம்
சவுக்கு சங்கர் மீண்டும் கைது முழுவிவரம்
இடைக்கால பிணையில் வெளியே வந்திருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் ஆந்திராவில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே சிறையில் இருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் மருத்துவ காரணங்களுக்காக பிணையில் வந்திருந்தார். இந்நிலையில் ஆந்திராவில் உள்ள ஒரு விடுதியில் வைத்து சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது அவரைப் போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த டிசம்பர் 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சங்கர் மருத்துவ காரணங்களுக்கு நிபந்தனை ஜாமீனை வழங்கப்பட்டது. அத்துடன், வழக்கு தொடர்பாக பேட்டி அளிக்கக் கூடாது எனவும், வழக்கில் தொடர்புடைய நபர்களை சந்திக்கக் கூடாது எனவும் கண்டிஷன் போட்டது.
நீதிமன்றத்தின் நிபந்தனைகளை மதிக்காமல் மீண்டும் சாட்சிகளுக்கு மிரட்டல் விடுப்பது, பத்திரிக்கை மற்றும் சமூக வளைதளங்களில் பேசி வீடியோ வெளியிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து, இவர் ஜாமீன் நிபந்தனைகளை மீறி வருவதாக போலீசார் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்ததோடு, சவுக்கு சங்கர் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கலும் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாக தெரியவந்தால் அவரை கைது செய்யலாம் என்று உத்தரவிட்டது. மேலும், அவருடைய இடைக்கால ஜாமீன் முடிவதால், அவர் சரண் அடைய வேண்டும் எனவும், இல்லையென்றால் போலீசார் உரிய நடவடிக்கையை எடுக்கலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
Tags: தமிழக செய்திகள்
