தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அதிரடி மாற்றம் புதிய செயலாளரார் யார் தெரியுமா
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அதிரடி மாற்றம் புதிய செயலாளரார் யார் தெரியுமா
தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் உளவுத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தற்போது வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி வரும் சாய்குமார் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமைச் செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சாய்குமார் உடனடியாக பதவியேற்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல், உளவுத்துறை டிஜிபி டேவிட்சனும் மாற்றப்பட்டுள்ளார். அவரது இடத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் தமிழகத்தின் மிக உயரிய அதிகாரப் பதவிகளில் இன்று அதிரடி மாற்றங்களைச் செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக எம். சாய் குமார் ஐஏஎஸ் (1990 பேட்ச்) நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் தேர்தல் தயார் நிலை குறித்து ஆய்வு செய்த இந்தியத் தேர்தல் ஆணையம், நிர்வாக நடுநிலையை உறுதிப்படுத்தும் வகையில் எம். சாய் குமார் அவர்களைத் தலைமைச் செயலாளராக நியமித்துள்ளது. இதற்கான உத்தரவு உடனடியாகச் நடைமுறைக்கு வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரி இன்று மாலை 6:00 மணிக்குள் பொறுப்பேற்றுக்கொண்டதற்கான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
