விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்
விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், திமுக மாநில வர்த்தக அணி நிர்வாகியுமான பி.டி.செல்வகுமார், திமுகவிலிருந்து விலகி மீண்டும் தனது சுயேச்சை மக்கள் இயக்கத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளார்.திமுகவில் இணைந்து பணியாற்றி வந்த பி.டி.செல்வகுமார், சமீபகாலமாகத் தமிழக அரசியலில் நிலவும் சூழல்கள் மற்றும் தனது சொந்த ஊரான கன்னியாகுமரி மக்களின் விருப்பத்திற்கு இணங்க இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நான் தங்கள் இயக்கத்தில் இணைந்தேன். எனக்கு மாநில வர்த்தகர் அணியில் துணை செயலாளர் பொறுப்பு தந்தீர்கள். அதற்கு நான் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் கலப்பை மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள், அரசு பள்ளிகளுக்கு வகுப்பறைகள், கலையரங்கம் கட்டி தந்துள்ளேன்.திராவிட முன்னேற்ற கழகம் மூலம் எனக்கு அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில், குமரி மக்களுக்கு மேலும் அதிரடியாக நல்ல செயல் திட்டங்களை செய்ய எண்ணியிருந்தேன். காலம் எனக்கு அதிகாரம் அளிப்பதை தள்ளிப் போடுகிறது.எனவே குமரி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் திமுகவில் இருந்து விலகி மீண்டும் கலப்பை மக்கள் இயக்கம் மூலமாக எனது பணியை தொடர விரும்புகிறேன். காலம் மாறும் மாற்றமே மானுட தத்துவம் என்ற அடிப்படையில் என்றும் மக்களுக்காக நற்பணியாற்ற காத்திருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
Tags: அரசியல் செய்திகள்
