தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடுவதற்குத் தடை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடுவதற்குத் தடை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 126 A-ன் படி 09.04.2026 வியாழக்கிழமை காலை 7:00 மணி முதல் 29.04.2026 புதன் கிழமை மாலை 6.30 மணி வரை தேர்தல் கருத்து கணிப்புகள் பத்திரிகைகளில் வெளியிட இந்திய நேர்தல் ஆணையத்தால் தடை விதித்துள்ளது-மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப, அவர்கள் தகவல்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலுக்கான தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் கடந்த 15.03.2026 அன்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகின்றன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 126 A-ன் படி 09.04.2026 வியாழக்கிழமை காலை 7:00 மணி முதல் 29.04.2026 புதன் கிழமை மாலை 6.30 மணி வரை தேர்தல் கருத்து கணிப்புகள் பத்திரிகைகள் உள்ளிட்ட அச்சிடப்பட்ட ஊடகங்கள் மூலமாகவோ. மின்னணு ஊடகங்கள் மூலமாகலோ அல்லது வேறு ஏதேனும் வழிகளிலோ பொது தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகள் வெளியிட இந்திய தேர்தல் ஆணையத்தால் தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்ற விவரம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி நிபந்தனைகளை மீறும் ஊடகங்கள் (Print & Electronic meda) மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 126 A ன் படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2026/03/17749337087786.pdf
Tags: அரசியல் செய்திகள்
