Breaking News

சாத்தான்குளம் லாக்கப் டெத் வழக்கில் 9 போலீசாருக்கு தூக்கு தண்டனை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

6 வருடங்களுக்கு பிறகு சாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் லாக்-அப் மரணமாக மிகக் கொடூரமான முறையில் தந்தை, மகன் என இருவரையும் தாக்கியதாக பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தந்தை - மகன் கொலை வழக்கில், சுமார் 6 ஆண்டுகால நீண்ட விசாரணைக்குப் பிறகு இன்று மதுரை மாவட்ட நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் காவலில் உயிரிழந்த விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசார் மீதான தீர்ப்பு இன்று வெளியானது

ஜூன் 2020-ல் ஊரடங்கு விதிகளை மீறி கடை திறந்ததாகக் கூறி, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து அவர்கள் இருவரும் கொடூரமாகத் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்து, அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சாத்தான்குளம் பென்னிக்ஸ் ஜெயராஜ் உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு சிபிஐ வசமானது. அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது ஜாமீன் மனுக்கள் உச்சநீதிமன்றம் வரை தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில் காவல்நிலைய மரணங்கள் சமுதாயத்தில் மிக கொடுமையானவை எனக் கூறிய நீதிபதி முத்துக்குமரன், இவ்வழக்கில் மரண தண்டனை விதிப்பதே சரியானது என்றார். சட்டத்தை காக்க வேண்டியவர்களே இப்படி செய்துள்ளனர், பழிவாங்கும் நோக்கில் இருவரும் அடித்தே கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். இவ்வழக்கில் தொடர்புடைய 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்தும் உத்தரவிட்டார். காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனையுடன் ரூ.15 லட்சம் அபராதமர் விதிக்கப்பட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback