ரூ.8000 கூப்பன் விநியோகம் செய்யக் கூடாது! மீறினால் வழக்குப்பதிவு- தேர்தல் ஆணையம்
ரூ.8000 கூப்பன் விநியோகம் செய்யக் கூடாது! மீறினால் வழக்குப்பதிவு- தேர்தல் ஆணையம்
திமுகவினர் கொடுக்கும் ரூ.8000 கூப்பன் தவறாக வழிநடத்தக் கூடியது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக ரூ.8,000 கூப்பன் வழங்கப்படும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் ஒவ்வொரு கூட்டத்திலும் கூறி மக்களை கவர்ந்து வருகின்றனர். அதாவது, வாஷிங் மெஷின், டிவி, ஃபிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் ரூ.8 ஆயிரம் மதிப்பிலான கூப்பனைப் பயன்படுத்தி புதிதாக வாங்கிக்கொள்ளலாம் அல்லது ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களூக்கு மாற்றாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டத்தை திமுக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தது.
இந்த திட்டத்தை மக்களிடம் சேர்ப்பதற்காக திமுக வேட்பாளர்கள் பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் ரூ.8,000 கூப்பன் மாதிரிகளை பொதுமக்களிடம் விநியோகித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இது போன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். இந்த சூழ்நிலையில் பொதுமக்களுக்கு ரூ.8,000 கூப்பன் வழங்கியது தொடர்பாக சில இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். அதில்,
மேற்கூறிய சான்றிதழ் மின்னணு ஊடகங்களில் (Electronic media) உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதற்காக மட்டுமே வழங்கப்பட்டது என இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. இச்சான்றிதழ் அச்சிடப்பட்ட பிரசுரப் பொருட்கள், குறிப்பாக துண்டுப் பிரசுரங்கள் (pamphlets) அல்லது கைப்பிரதிகள் (handbills) ஆகியவற்றிற்கு பொருந்தாது
அத்தகைய அச்சிடப்பட்ட பொருட்கள் அனைத்தும் இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 இன் பிரிவு 127A மற்றும் நடைமுறையில் உள்ள மாதிரி நடத்தை விதிமுறைகள் (Model Code of Conduct) ஆகியவற்றைப் பின்பற்றி தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
எனவே, மேற்கண்ட வகையில் வெளியிடப்பட்ட தகவல் உண்மைக்கு புறம்பானதும் தவறாக வழிநடத்தக் கூடியதுமானதாகும்.அச்சடிக்கப்படும் எந்தவித கூப்பன் மாதிரிகள், துன்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யக் கூடாது. தேர்தல் நடத்தி விதிமுறைகளை மீறி செய்யப்படுமானால் வழக்கு பதிவு செய்யப்படும்" எனக் கூறியுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
