4 ஆண்டு B. Sc, B.Ed மற்றும் B.A, B.Ed படிப்புகள் ரத்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு முழு விவரம்
4 ஆண்டு B. Sc, B.Ed மற்றும் B.A, B.Ed படிப்புகள் ரத்து முழு விவரம்
2026-2027 கல்வியாண்டு முதல், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எஸ்சி.,பி.எட் (B.Sc.B.Ed) மற்றும் பி.ஏ.,பி.எட் (B.A.B.Ed) படிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எஸ்சி., பி.எட். மற்றும் பி.ஏ., பி.எட். படிப்புகள் வரும் 2026-2027-ம் கல்வியாண்டு முதல் அதிரடியாக நிறுத்தப்படுகின்றன.
தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் புதிய வழிகாட்டுதலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெளியான அரசு அறிவிப்புகளின்படி, இந்த ஒருங்கிணைந்த படிப்புகளுக்கான அங்கீகாரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
இந்த அதிரடி மாற்றத்தால், வரும் கல்வியாண்டு முதல் எந்தவொரு கல்வி நிறுவனமும் 4 ஆண்டு பி.எட் படிப்புகளில் புதிய மாணவர்களைச் சேர்க்க அனுமதி இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர் பணியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இது ஒரு பெரிய ஏமாற்றமாகத் தெரிந்தாலும், அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறி ஏதேனும் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை நடத்தினால், அதற்குப் பல்கலைக்கழகம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்றும் நிர்வாகம் எச்சரித்துள்ளது.தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் ஆசிரியர் கல்வியில் கொண்டு வரப்படும் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகவே இந்த மாற்றம் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இனி வரும் காலங்களில் பி.எட் படிக்கத் திட்டமிடும் மாணவர்கள் புதிய நடைமுறைகள் மற்றும் தகுதிகள் குறித்துப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் கவனித்து அதற்கேற்ப விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Tags: தமிழக செய்திகள்

