Breaking News

அடுத்த 2 நாட்களுக்கு ஹீட்வேவ் எச்சரிக்கை முழு விவரம்

அட்மின் மீடியா
0

அடுத்த 2 நாட்களுக்கு ஹீட்வேவ் எச்சரிக்கை முழு விவரம்



பொதுவாக ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே இருக்கும். இதனால் பகல் நேரத்தில் மட்டுமின்றி, இரவு நேரத்திலும் புழுக்கம் அதிகமாக இருக்கும். 

வட தமிழகக் கடலோர மாவட்டங்கள், சென்னை மற்றும் உள் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் 'வெப்ப அலை' வீசும் நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். 

தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக, கோவையில் இந்த அதீத வெப்பம் வரும் ஏப்ரல் 12, 2026 வரை நீடிக்கக்கூடும். குறிப்பாக மதிய நேரங்களில் அனல் காற்று வீச வாய்ப்புள்ளதால், ‘வெப்ப அலை’ (Heatwave) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஈரோடு, கரூர், திருச்சி, வேலூர், திருத்தணி, சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 12, 2026 வரை பல மாவட்டங்களில் கடுமையான வெப்ப அலை (Heatwave) வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது, வெப்பநிலை() க்கும் மேல் உயரும். குறிப்பாக மதியம் 12 முதல் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்கவும், போதுமான அளவு தண்ணீர், இளநீர், கரும்பு ஜூஸ் பருகவும்

தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி தண்ணீர், எலுமிச்சை சாறு, மோர், இளநீர், கரும்பு ஜூஸ் குடிக்கவும்.நேரம்: மதியம் 12:00 மணி முதல் 3:00 மணி வரை நேரடி வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும்.

வெளிர் நிற, தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும்.உடல்நலம்: வெயிலில் செல்லும் போது குடை, தொப்பி, சன்கிளாஸ் பயன்படுத்தவும்.

மயக்கம், தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.எச்சரிக்கை: குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளைப் பூட்டிய வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாம்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback