Breaking News

ஈரான் மீதான தாக்குதலை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்த அமெரிக்கா.. போர் நிறுத்தத்தை ஏற்பதாக ஈரான் அரசும் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஈரான் மீதான தாக்குதலை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்த அமெரிக்கா.. போர் நிறுத்தத்தை ஏற்பதாக ஈரான் அரசும் அறிவிப்பு



மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத வகையிலான கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். 

ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்துவிட்டு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய ஈரானுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இந்தச் சூழலில் பேசிய டிரம்ப், ஈரான் தனது போக்கைத் மாற்றிக் கொள்ளாவிட்டால் அந்நாட்டின் மின் நிலையங்கள் மற்றும் முக்கியக் கட்டமைப்புகள் தரைமட்டமாக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார். 

அமெரிக்க அதிபரின் இந்த ஆக்ரோஷமான பேச்சால், இன்று இரவு ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான ராணுவத் தாக்குதல் நடத்தப்படுமோ என்ற அச்சம் எழுந்தது

தேசத்தைப் பாதுகாக்க ஒரு கோடியே 40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஈரானியர்களும் உயிர்த் தியாகம் செய்யவும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர் என்று அந்நாட்டின் அதிபர் மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஈரானைப் பாதுகாக்க தங்கள் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக இந்த கணம் வரை 1.4 கோடிக்கும் அதிகமான பெருமைமிக்க ஈரானியர்கள் பதிவு செய்துள்ளனர். நானும் ஈரானுக்காக உயிர்த் தியாகம் செய்ய எந்தக் காலத்திலும் தயாராக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவத் தளபதியின் வேண்டுகோளை ஏற்று, ஈரான் மீதான தாக்குதலைத் தற்காலிகமாக 2 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்

.ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்க டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் அடிப்படையில், ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாகவும் பாதுகாப்பாகவும் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டால், 2 வார காலப் போர்நிறுத்தத்திற்கு டிரம்ப் சம்மதித்துள்ளார்.

தமது முடிவிற்கான காரணங்களை அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். அதில், ஈரானில் தாங்கள் திட்டமிட்டிருந்த அனைத்து ராணுவ இலக்குகளையும் அமெரிக்கப் படைகள் ஏற்கனவே அடைந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். 

ஈரானிடமிருந்து 10 அம்சங்கள் கொண்ட ஒரு அமைதித் திட்ட முன்மொழிவை அமெரிக்கா பெற்றுள்ளது. இது பேச்சுவார்த்தையைத் தொடர ஒரு நல்ல அடித்தளமாக இருக்கும் என அவர் நம்புகிறார். 

மத்திய கிழக்கில் நீண்டகால அமைதியை நிலைநாட்ட ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்த 2 வார கால அவகாசம் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

போர் நிறுத்தம் முக்கிய அம்சம்:-

ஈரானுடனான போரை 2 வாரங்களுக்கு நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணையை திறக்க இன்று காலை 5.30 மணி வரை ஈரானுக்கு டிரம்ப் கெடு விதித்திருந்த நிலையில் திடீர் முடிவு

இரண்டு வார போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்வதாக ஈரானும் அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணையை அடுத்த இரண்டு வாரத்துக்கு திறக்கவும் ஈரான் ஒப்புதல்

போர் நிறுத்தம் தொடர்பாக ஈரானின் 10 அம்ச கோரிக்கைகளை பரிசீலிப்போம் - அதிபர் டிரம்ப்

இடைக்கால போர் நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்த பாக். பிரதமருக்கு ஈரான் நன்றி

வரும் 10ஆம் தேதியன்று இஸ்லாமாபாத்தில் நிரந்தர போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் ஏற்பாடு

போர் நிறுத்தம் குறித்து பேசுவதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானை இஸ்லாமாபாத்திற்கு அழைத்துள்ளது பாகிஸ்தான்

இடைக்கால போர் நிறுத்தத்தால் மேற்காசியாவில் தற்காலிகமாக பதற்றம் தணிந்தது

நிரந்தர போர் நிறுத்தத்திற்கு முன்வர வேண்டும் என மேற்காசிய நாடுகள் வலியுறுத்தல்

ஈரான் மீதான தாக்குதல் ஓய்ந்தாலும் லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான தாக்குதல் தொடரும் - இஸ்ரேல்

ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்படுவதால் கப்பல் போக்குவரத்து சீரடைந்து உலகளவில் விரைவில் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்ப்பு

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback