Breaking News

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்


தமிழக தலைநகர் சென்னையில் அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.

முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் தகுதியை பெற்றிருப்பின் ஏப்ரல் 13, 2026.நேரம்: காலை 11:00 மணி.இடம்: சென்னை தலைமை தபால் நிலையம், ராஜாஜி சாலை, சென்னை - 600001.அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்க்காணலில் கலந்து கொள்ளலாம்.


கல்வி தகுதி:-

குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:- 

18 வயதில் இருந்து 50 வயது வரை

கூடுதல் தகுதிகள்;-

சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், 

ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், 

அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், 

சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், 

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள்,

கணினிப் பயிற்சி உள்ளவர்கள் / சொந்தப்பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.

இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் அயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.

நேர்காணல்:-

மேற்கண்ட தகுதியுடையவர்கள் 

மூன்று புகைப்படத்துடன் (பாஸ்போர்ட் அளவு), 

அசல் மற்றும் இரண்டு நகல் -வயதுச்சான்று, 

முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் அனுகவும். 

நேர்க்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் [NSC] அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை [KVP] பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.

இந்த நேர்க்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக நடத்தப்படுகிறது. 

முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும். 

 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback