திமுக கூட்டணியில் SDPI,மஜக, முக்குலத்தோர் புலி படை கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு!
திமுக கூட்டணியில் SDPI,மஜக, முக்குலத்தோர் புலி படை கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு!
திமுக கூட்டணியில் SDPI,மஜக, முக்குலத்தோர் புலி படை கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மூன்று கட்சிகளும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளன.
திமுக மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களுமாக இணைந்து, 175 இடங்களில் உதயசூரியன் போட்டியிடவுள்ளது. ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதி என்ன என்பது நாளை இறுதியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 25) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மஜக தலைவர் தமிமுன் அன்சாரி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. 5 தொகுதிகள் அடங்கிய விருப்பப் பட்டியலை திமுக தலைமையிடம் வழங்கியுள்ளதாகவும், அதில் ஒரு தொகுதியை ஒதுக்குமாறு வலியுறுத்தியதாகவும் தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
