புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்த தவெக தலைவர் விஜய்..!! Puducherry assembly elections TVK candidates list 2026
அட்மின் மீடியா
0
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்த தவெக தலைவர் விஜய்..!!Puducherry assembly elections TVK candidates list 2026
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் சட்டமன்றத் தேர்தல் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் விசில் சின்னத்தில் விஜய்யின் தவெக போட்டியிடுகிறது.இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிவித்தார்.
இது தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கை:
வருகின்ற 09.04.2026 அன்று நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துக் களம் காண்கிறது என்பதை அனைவரும் அறிவீர்கள். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளித்தவர்களிலிருந்து இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்காணும் தோழர்கள், குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள்.
லாஸ்பேட்டை சட்டமன்ற தொகுதியில் V. சாமிநாதன் அவர்கள் போட்டியிடுகின்றார்
காரைக்கால் தெற்கு: சட்டமன்ற தொகுதியில் K.A.U. அசனா அவர்கள் போட்டியிடுகின்றார்
நெட்டப்பாக்கம் (தனி): சட்டமன்ற தொகுதியில் L. பெரியசாமி அவர்கள் போட்டியிடுகின்றார்
திருபுவனை (தனி): சட்டமன்ற தொகுதியில் AK. சாய் J. சரவணன் குமார் அவர்கள் போட்டியிடுகின்றார்
முத்தியால்பேட்டை: சட்டமன்ற தொகுதியில் J. பிரகாஷ் குமார் அவர்கள் போட்டியிடுகின்றார்
பாகூர்: சட்டமன்ற தொகுதியில் N. தனவேலு அவர்கள் போட்டியிடுகின்றார்
ராஜ் பவன்: சட்டமன்ற தொகுதியில் V.J. சந்திரன் அவர்கள் போட்டியிடுகின்றார்
உப்பளம்: சட்டமன்ற தொகுதியில் S. சிவா அவர்கள் போட்டியிடுகின்றார்
உழவர்கரை:சட்டமன்ற தொகுதியில்S. சசிபாலன் அவர்கள் போட்டியிடுகின்றார்
அரியாங்குப்பம்:சட்டமன்ற தொகுதியில் S. குமரவேலு அவர்கள் போட்டியிடுகின்றார்
மணவெளி: சட்டமன்ற தொகுதியில் B. இராமு அவர்கள் போட்டியிடுகின்றார்
வில்லியனூர்:சட்டமன்ற தொகுதியில் R. ரமேஷ் அவர்கள் போட்டியிடுகின்றார்
முதலியார்பேட்டை: சட்டமன்ற தொகுதியில் N. மணிபாலன் அவர்கள் போட்டியிடுகின்றார்
மண்ணாடிப்பட்டு: சட்டமன்ற தொகுதியில் K. பாரதிதாசன் அவர்கள் போட்டியிடுகின்றார்
உருளையன்பேட்டை: சட்டமன்ற தொகுதியில் S. மரிய பிரான்சிஸ் அவர்கள் போட்டியிடுகின்றார்
மங்கலம்: சட்டமன்ற தொகுதியில் M.K. சத்யா அவர்கள் போட்டியிடுகின்றார்
காமராஜ் நகர்: சட்டமன்ற தொகுதியில் Dr. R. சுமன் அவர்கள் போட்டியிடுகின்றார்
நெல்லித்தோப்பு: சட்டமன்ற தொகுதியில் S. விக்னேஷ்வரன் அவர்கள் போட்டியிடுகின்றார்
காலாப்பட்டு: சட்டமன்ற தொகுதியில் D. சசிக்குமார் அவர்கள் போட்டியிடுகின்றார்
இந்திரா நகர்: சட்டமன்ற தொகுதியில் S. முருகன் அவர்கள் போட்டியிடுகின்றார்
கதிர்காமம்: சட்டமன்ற தொகுதியில் R. ஜெயந்தி அவர்கள் போட்டியிடுகின்றார்
ஊசுடு (தனி): சட்டமன்ற தொகுதியில் S. சரகணபவா அவர்கள் போட்டியிடுகின்றார்
தட்டாஞ்சாவடி: சட்டமன்ற தொகுதியில் M. பன்னீர்செல்வம் அவர்கள் போட்டியிடுகின்றார்
ஏம்பலம் (தனி): சட்டமன்ற தொகுதியில் V. தமிழ்ச்செல்வன் அவர்கள் போட்டியிடுகின்றார்
நெடுங்காடு (தனி): சட்டமன்ற தொகுதியில் U. காமராஜ் அவர்கள் போட்டியிடுகின்றார்
திருநள்ளாறு: சட்டமன்ற தொகுதியில் A. ராஜா முஹம்மது அவர்கள் போட்டியிடுகின்றார்
காரைக்கால் வடக்கு: சட்டமன்ற தொகுதியில் A. வெங்கடேஷ் அவர்கள் போட்டியிடுகின்றார்
நிரவி – T.R. பட்டினம்: சட்டமன்ற தொகுதியில் G. கணேஷ் அவர்கள் போட்டியிடுகின்றார்
மாகே: சட்டமன்ற தொகுதியில் M. பிரிஜேஷ் அவர்கள் போட்டியிடுகின்றார்
ஏனாம்: சட்டமன்ற தொகுதியில் A. தோட்டா ராஜு அவர்கள் போட்டியிடுகின்றார்
புதுச்சேரியில் ஏப்ரல் 9-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. புதுவையில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய நாளை மார்ச் 23-ந் தேதி கடைசி நாள்.
Tags: அரசியல் செய்திகள்