இந்தியா முழுவதும் மீண்டும் 'லாக்டவுன்'? என பரவும் வதந்தி உண்மை என்ன Lockdown 2026
அட்மின் மீடியா
0
இந்தியா முழுவதும் மீண்டும் 'லாக்டவுன்'? என பரவும் வதந்தி உண்மை என்ன Lockdown 2026
சமூகவலைதளங்களில் பரவும் செய்தி:-
ஆண்டு இறுதித் தேர்வுகள் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும், அனைத்து மாநிலத்திலும் நடந்து கொண்டிருப்பதால், அது முடிந்த உடன் லாக்டவுன் அமுல் படுத்த இருப்பதாக தகவல்.!
கோவிட்-19ல் அமுல்படுத்தப்பட்ட லாக் டவுன் போன்று இல்லாமல்,எரிவாயு பொருள்களின் பதட்றத்தையும், தட்டுப்பாட்டையும், கட்டுப்படுத்தக்கூடிய புதுவகை லாக்டவுன் என சொல்லப்படுகிறது.!
வளைகுடா நாட்டில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழலில் உள்ளது நமது இந்தியாவிற்கு, அச் சூழலை கருத்தில் கொண்டு எரிபொருள்களை மிச்சப்படுத்தவும், எரிபொருள்களின் தட்டுப்பாடுகளை தேசிய அளவில் வராமல் பாதுகாக்கவும், இந்த லாக்டவுன் அமல்படுத்து படுகிறது என பரவலாக பேசப்பட்டு வருகிறது,
இது சம்பந்தமாக பிரதமர் அலுவலகத்தில் உள்ள முதன்மை அதிகாரிகள் அனைத்து மாநிலத்திலும் உள்ள தலைமை செயலாளர்களிடமும், முதல்வர்களிடமும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது,
வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் வணிக நிறுவனங்கள் இயங்கும். அதாவது திங்கள், புதன், வெள்ளி, மீதி நாட்களில் பொதுமக்கள் வாகனங்களில் வெளியூர் செல்ல அனுமதி இல்லை, அத்திவாசிய தேவைக்கு மட்டும் வாகனங்களை உபயோகப்படுத்தலாம், அதுவும் இ- பாஸ் விண்ணப்பம் பெற்று முறையான அறிவுறுத்தலுடன் செல்லலாம், மற்றபடி ஒவ்வொரு ஊரிலும் மருத்துவமனை, மருந்து கடை, பால் கடை, காய்கறி கடைகள், இயங்க அனுமதி இருக்கும்.
அனேகமாக இந்த லாக்டவுன் முறை அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் அமல்படுத்த மிகவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்.! இதைத்தான் நேற்று பாரதப் பிரதமர் சூசகமாக அறிவித்துள்ளார்.!
உண்மை என்ன:-
இந்தியாவில் லாக்டவுன் விதிக்கப்படலாம் என்கிற எந்தவொரு திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும், மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்..
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
உலகளாவிய நிலைமை நிலையற்றதாகவே உள்ளது, மேலும் எரிசக்தி, விநியோகச் சங்கிலிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பான முன்னேற்றங்களை நாங்கள் நிகழ்நேர அடிப்படையில் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி ஜி அவர்களின் தலைமையில், நமது குடிமக்களுக்கு எரிபொருள், எரிசக்தி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
உருவாகும் சவால்களைச் சமாளிக்க நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம்.உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்வதில் இந்தியா தொடர்ந்து மீள்திறனை வெளிப்படுத்தியுள்ளது, மேலும் நாங்கள் சரியான நேரத்தில், முன்கூட்டியே மற்றும் ஒருங்கிணைந்த முறையில் தொடர்ந்து செயல்படுவோம்.
இந்தியாவில் பொதுமுடக்கம் குறித்த வதந்திகள் முற்றிலும் பொய்யானவை. இதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன், இந்திய அரசாங்கத்தால் அத்தகைய எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை.இத்தகைய காலங்களில், நாம் அமைதியாகவும், பொறுப்புடனும், ஒற்றுமையுடனும் இருப்பது முக்கியம்.இத்தகைய சூழ்நிலையில் வதந்திகளைப் பரப்பி, பீதியை உருவாக்கும் முயற்சிகள் பொறுப்பற்றவை மற்றும் தீங்கு விளைவிப்பவை.
The global situation remains in flux, and we are closely monitoring developments across energy, supply chains, and essential commodities on a real-time basis.
Under the leadership of Hon’ble PM@narendramodiJi, all necessary steps are being taken to ensure uninterrupted availability of fuel, energy, and other critical supplies for our citizens. We are fully prepared to handle emerging challenges.
India has consistently demonstrated resilience in the face of global uncertainties, and we will continue to act in a timely, proactive, and coordinated manner.
Rumours of a lockdown in India are completely false. Let me state this clearly, there is no such proposal under consideration by the Government of India.
In such times, it is important that we remain calm, responsible, and united.Attempts to spread rumours and create panic in such a situation are irresponsible and harmful.
Tags: FACT CHECK இந்திய செய்திகள் மறுப்பு செய்தி