கேந்திர வித்யாலயா பள்ளிகளில் LKG , UKG அட்மிஷன் ஆரம்பம்! kendriya vidyalaya balvatika admission 2026-27
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கேந்திரவித்யாலயா பள்ளிகள் நாடு முழுதும் செயல்பட்டுவருகின்றது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், குறைந்த கட்டணமே வசூலிக்கப் படுகிறது.
கேந்திரவித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச வயது ஐந்திலிருந்து, நடப்பு கல்வி ஆண்டில் ஆறாக உயர்த்தப்பட்டது.இதை தொடர்ந்து, ப்ரீ.கே.ஜி, எல்.கே.ஜி, மற்றும் யு.கே.ஜி வகுப்புகள், ‘பால்வாடிகா’ என்ற பெயரில், கே.வி பள்ளியில் துவங்கப்படுகிறது.
கேந்திரிய வித்யாலயா (கே.வி) பால்வதிகாவில் 3–6 வயதுடைய குழந்தைகளுக்கான (பால்வதிகா 1, 2, 3) 2026-27 ஆம் ஆண்டுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது
பால்வதிகா 1 மற்றும் 3 ஆம் வகுப்புகளுக்கான சேர்க்கை பொதுவாக kvsangathan.nic.in வழியாக ஆன்லைனில் இருக்கும் ,
வயது வரம்பு (சேர்க்கை ஆண்டின் மார்ச் 31 நிலவரப்படி):
புதிய தேசிய கல்விக் கொள்கை விதிகளின்படி, மார்ச் 31, 2026 அன்றுள்ளபடி மாணவர்களுக்கான வயது வரம்பு பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பால்வாடி -1 (Balvatika 1): 3 வயதுபூர்த்தியடைந்திருக்கவேண்டும் (4 வயதுக்குள்இருக்கவேண்டும்)
பால்வாடி-2 (Balvatika 2): 4 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் (5 வயதுக்குள் இருக்க வேண்டும்)
பால்வாடி-3 (Balvatika 3): 5 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் (6 வயதுக்குள் இருக்க வேண்டும்)
1-ஆம் வகுப்பு: 6 முதல் 8 வயதுக்குள் இருக்க வேண்டும்
தேவையான ஆவணங்கள்:
குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்,
வசிப்பிடச் சான்று,
சாதிச் சான்றிதழ்
அனைத்து கே.வி. பள்ளிகளிலும் பால்வடிகா வகுப்புகள் இல்லை; அவை தேர்ந்தெடுக்கப்பட்ட கே.வி.களில் செயல்படுத்தப்படுகின்றன
மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை, https://chennaiiit.kvs.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேரடியாக விண்ணப்ப பதிவு நடக்கும். வரும் மணி வரை பதிவுகள் நடக்கும். பால்வாடிகா ஒன்றாம் பிரிவில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி சேர்க்கை வழங்கப்படும்.
அதிகார பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய
https://rochennai.kvs.gov.in/en/
Tags: தமிழக செய்திகள்
