Breaking News

சேலஞ்ச் ஓட்டு , டெண்டர் ஓட்டு என பரவும் பொய்யான தகவல் உண்மை என்ன False Claims On 'Challenge Vote' And 'Tender Vote'

அட்மின் மீடியா
0
சேலஞ்ச் ஓட்டு , டெண்டர் ஓட்டு என பரவும் பொய்யான தகவல் உண்மை என்ன False Claims On 'Challenge Vote' And 'Tender Vote'


பரவும் செய்தி:-

கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பொது மக்கள் நலன் கருதி ஒரு முக்கிய அறிவிப்பு!

நீங்கள் வாக்குச்சாவடி சென்று, அங்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டிருப்பது தெரியவந்தால், உங்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை இரண்டில் ஏதேனும் ஒன்றை காட்டி, வாக்குரிமைச் சட்டம் பிரிவு 49A ன் கீழ் "சேலஞ்ச் ஓட்டு" கேட்டு வாக்கினை பதிவு செய்யுங்கள். உங்கள் வாக்கினை உங்களுக்கு முன்னதாக வேறொருவர் பதிவு செய்திருந்தால், "டெண்டர் ஓட்டு" கேட்டு உங்கள் வாக்கினை பதிவு செய்யுங்கள். ஒரு வாக்குச் சாவடியில் 14% க்கு மேல் டெண்டர் ஓட்டு பதிவாகி இருந்தால், அங்கு மறு வாக்குப் பதிவு நடத்தப்படும். வாக்குரிமையின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒவ்வொருவரும் விழிப்புணர்வு பெற்றிட இத்தகவலை அதிகபட்ச வாட்ஸ் அப் குழுக்களுக்கும், நண்பர்களுக்கும் சமுதாய நலன் கருதி இத்தகவலை மறவாமல் பகிர்ந்திடுங்கள். என பரவுகின்றது

உண்மை என்ன

மேற்கண்ட தகவல் உண்மை இல்லை

சேலஞ்ச் ஓட்டு' எனப்படும், 'சவால் ஓட்டு என்றால் என்ன. 

சேலஞ்ச் ஓட்டு என்பது, வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து வாக்களிக்க வரும் வாக்காளர் ஒருவரின் அடையாளம் அல்லது ஆவணம் அல்லது வாக்காளர் கள்ள போட வந்துள்ளார் என பூத் ஏஜெண்ட்க்கு சந்தேகம் வந்தால் அவர் தேர்தல் அதிகாரியிடம்  ஆட்சேபனை தெரிவிக்கலாம்.

அங்கு தேர்தல் அதிகாரி பூத் ஏஜெண்ட்டிடமிருந்து ரூ.2 கட்டணம் பெற்று  வாக்காளரிடம் உள்ள ஆவணங்களை சரிபார்த்து ஆட்சேபனை தவறு என்றால், அந்த வாக்காளர் ஓட்டுப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.

ஆட்சேபனை சரி எனில், அந்த வாக்காளரை போலீசாரிடம் ஒப்படைப்பர்.பின், முகவரிடமிருந்து பெற்ற ரூ.2ஐ அவரிடம் திருப்பி வழங்குவர். இது தான் சேலஞ்ச் ஓட்டு ஆகும்

மேலும் சமூகவலைதளங்களில் பரவும் செய்தியில் உள்ளது போல் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் சேலஞ் ஓட்டு போடுங்கள் என்று கூறுவது பொய்யாகும். வாக்காளர்  பட்டியலில் பெயர் இருந்தால் தான் ஒருவர் ஓட்டு போடமுடியும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத யாரும் எந்த ஓட்டும் போடமுடியாது. ஒருவரின் பெயர் வாக்குப் பட்டியலில் இல்லாதபோது, அவர்களால் வாக்களிக்க முடியாது. 18 வயது நிரம்பிய குடிமக்களின் பெயர்கள் அவர்களின் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பிறகே, இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையை வழங்குகிறது. ஒருவரிடம் வாக்காளர் அடையாள அட்டை இருப்பதால், அவர்கள் நிச்சயமாக வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அர்த்தமல்ல. அவர்கள் வாக்களிக்க வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர் இடம்பெறுவது கட்டாயமாகும்.

மேலும், பொய்யாக பரவும் செய்தியில் குறிப்பிட்டுள்ள சட்டப்பிரிவு 49 ஏ என்பது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பற்றிப் பேசும் சட்டப்பிரிவே அன்றி, சேலஞ்ச் வாக்கு பற்றி இல்லை என தெர்ந்து கொள்ளுங்கள்

டெண்டர் வாக்கு என்றால் என்ன

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்து நீங்கள் வாக்களிக்காமல் உங்களுக்கு பதில் உங்கள் ஓட்டை யாராவது கள்ள ஓட்டு போட்டிருந்தால் டெண்டர் ஓட்’ என்ற முறைப்படி, நீங்கள் உங்கள் வாக்குரிமையை மீண்டும் பெறலாம்’

அதாவது டெண்டர் ஓட்டு (Tendered Vote) என்பது தேர்தல் சட்டத்தில், ஒரு வாக்காளர் வாக்குச்சாவடிக்கு வந்து, தனது வாக்கை மற்றொருவர் ஏற்கனவே கள்ள ஓட்டாகப் போட்டுவிட்டதை உணரும்போது, வாக்குப்பதிவு அதிகாரியிடம் முறையிட்டு, அடையாளத்தை நிரூபித்து, தனி வாக்குச்சீட்டில் (Electronic Machine-ல் அல்ல) போடும் வாக்கு ஆகும். 

வாக்காளரின் அடையாள ஆவணங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர், உண்மையான வாக்காளர் அவர்தானா; அவருடைய வாக்கு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வார். வாக்காளரை உறுதிப்படுத்த இயலாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட வாக்காளர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார் அல்லது அவர்தான் உண்மையான வாக்காளர் என உறுதி செய்தால், அந்த வாக்காளருக்கு வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும். அவர்கள், ஈவிஎம் (EVM) மூலம் வாக்களிக்க அனுமதிக்க மாட்டார்கள்.

மாறாக, ஆய்வுக்குரிய `டெண்டர் ஓட்டு’ப் படிவம் (17B படிவம், Tendered Ballot Paper) மூலம், 49 பி-ன் படி அவரை வாக்களிக்கச் செய்து,  அதற்குரிய உறையில் சீலிட்டு தனியாகக் கணக்கு வைத்து வாக்குப்பதிவு முடிந்ததும் மண்டல அதிகாரிகளிடத்தில் ஒப்படைக்கப்படும். வாக்கு எண்ணிக்கையின்போது, 49 பி முறைப்படி வாக்களிக்கப்படும் வாக்குகள் எண்ணப்படாது. ஒருவேளை வேட்பாளர்களின் வாக்குகள்  வித்தியாசம் மிகவும் குறைவாக இருப்பின் டெண்டர் ஓட்டுகள் நீதிமன்ற உத்தரவின்பேரில் மட்டுமே எண்ணப்படும். 

அதேபோல் டெண்டர் ஓட்டு 14% மேல் வாக்குகள் பதிவானால், அந்த வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும்”  என பரவும் செய்தியும் தவறானது.எனவே போலிச் செய்திகளை நம்பவேண்டாம்.

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback