Breaking News

திமுக தேர்தல் அறிக்கை முழு விபரம் DMK Manifesto 2026 PDF DOWNLOAD

அட்மின் மீடியா
0

 திமுக தேர்தல் அறிக்கை முழு விபரம் DMK Manifesto 2026


திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் - 28, மதிமுக-4, மமக - 2, கொமதேக -2, ஐயூஎம்எல் 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகள் 8, தேமுதிக 10 தொகுதிகளிலும் களம்காண்கின்றன. 

இந்த நிலையில் 164 பேர் அடங்கிய திமுக வேட்பாளர்களின் பட்டியலை மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். 

இதைத்தொடர்ந்து திமுகவின் தேர்தல் அறிக்கையை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார் .


திமுக தேர்தல் அறிக்கை

இல்லத்தரசி கூப்பன்: 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பனைப் பயன்படுத்தி வாஷிங் மெஷின், டி.வி., ஃபிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை, வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக்கொள்ளலாம் அல்லது

திராவிட மாடல் 2.0 ஆட்சியில் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 -மாக உயர்த்தி வழங்கப்படும்!

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் என திமுகவின் தேர்தல் வாக்குறுதி

இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சார பம்ப்செட்டுகள் வழங்கப்படும்

பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் உயர்த்தப்படும்

சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும் திமுக தேர்தல் வாக்குறுதி

உயர்கல்வி மாணவர்கள் 35 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்கப்படும்

அடுத்த ஐந்தாண்டுகளில் புதிதாக 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்

புதுமைப் பெண் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் இனி மாணவ மாணவியரின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான ஆண்டு வருமான வரம்பு 5 லட்சமாகவும் காப்பீட்டு தொகை 10 லட்சம் ஆகும் உயர்த்தப்படும்

முதியோர் உதவித்தொகை 1200 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 1500 ரூபாயிலிருந்து 2500 ரூபாயாக உயர்த்தப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி

மாவட்டங்கள் முதல் வட்டங்கள் வரையிலான அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான கருவிகள் இரண்டு மடங்காக்கப்படும்

ஒவ்வொரு மாவட்டத்திலும் டைட்டில் பூங்காக்கள்இரண்டு லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் டைட்டில் பூங்காக்கள் உருவாக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி

5,000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் கூடிய தரம் வாய்ந்த விளையாட்டு வசதிகள்

திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம் மாநகராட்சிகளின் அருகாமையில் நவீன உலகத்தர வசதிகளுடன் புதிய நகரங்கள்

அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 புதிய பேருந்துகள்

பொள்ளாச்சியில் மொழி போராட்ட காட்சிக்கூடம்

பல்வேறு துறைகளில் பணியாற்றும் திருநர், திருநங்கைகளுக்கு விருது வழங்கப்படும்.

பிசி, எம்பிசி, டிஎம்சி பிரிவினர் தொழில் தொடங்க ரூ.30 லட்சம் வரை கடன்

மீன்பிடி தடைகால சிறப்பு நிவாரண தொகை 8000 ரூபாயில் இருந்து 12000 ரூபாயாக ஆக உயர்த்தப்படும்.

மீண்பிடி குறைவு கால் சிறப்பு நிவாரண தொகை 6 ஆயிரத்தில் இருந்து 9 ஆயிரமாக உயர்த்தப்படும்.

தேர்தல் அறிக்கை டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்:-

https://drive.google.com/file/d/1NYPHMzv39nH7YNU5ZXTTw608Q_JfO75L/view?usp=sharing

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback