திமுக கூட்டணியிலிருந்து அதிகாரபூர்வமாக விலகுகிறோம் வேல்முருகன் அறிவிப்பு
திமுக கூட்டணியிலிருந்து அதிகாரபூர்வமாக விலகுகிறோம் வேல்முருகன் அறிவிப்பு
திமுக கூட்டணியில் இருந்து அதிகாரபூர்வமாக விலகுவதாக தவாக தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறுகிறது. திமுக கூட்டணியில் தவாகவுக்கு 2 தொகுதிகள் கேட்ட நிலையில், ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முன்வந்ததால் கூட்டணியிலிருந்து வெளியேறினோம். NDA கூட்டணியில் தவாக இடம் பெறாது என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன். தமிழகத்தில் அதிகாரிகளின் ஆட்சிதான் நடந்து வருகிறது. திமுக கூட்டணியில் இருந்து என்னை வெளியேற்ற அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதிகாரிகளின் பேச்சை கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியை திமுக புறக்கணித்திருக்கிறது. பெரியண்ணன் பாணியில் திமுக எங்களை கையாள்வதை ஏற்க முடியாது. இடங்களுக்காக கூட்டணியில் இருந்து விலகவில்லை. இடங்களை விட எங்களின் 10 கோரிக்கைகள் தான் முக்கியம். தமிழ்நாட்டு மக்களை நம்பி இந்த முடிவை எடுத்துள்ளோம்
2019, 2021, 2024 மற்றும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் பயணித்தோம். இம்முறை கூடுதல் இடங்கள் கேட்ட நிலையில், ஒரு இடம் வழங்குவதாகத் தெரிவித்தனர். மக்களுக்கான 10 அம்ச கோரிக்கைகளையும் முன்வைத்தோம். ஆனால், திமுக அதனை பொருட்படுத்தவில்லை. எங்களின் கோரிக்கைகளை திமுக அரசு பொருட்படுத்தவில்லை. சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட 10 கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைத்தோம்.” என்றார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
