Breaking News

பித்ரா எவ்வளவு கொடுக்கவேண்டும் ஜமாஅத்துல் உலமா சபை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அட்மின் மீடியா
0
பித்ரா எவ்வளவு கொடுக்கவேண்டும்  ஜமாஅத்துல்  உலமா சபை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

பித்ரா என்றால்  என்ன:-

பித்ரா (ஸதகத்துல் ஃபித்ர்) என்பது ரமலான் மாத இறுதியில், நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்பாக ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாக ஏழைகளுக்கு வழங்க வேண்டிய உணவுப் பொருள் அல்லது அதன் பண மதிப்பு ஆகும். இது நோன்பின் குறைகளை நீக்கி, பெருநாளில் ஏழைகளும் மகிழ்ந்து உணவருந்துவதை உறுதி செய்ய வழங்கப்படுகிறது.

பித்ரா யாருக்குக் கடமை: 

வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் (ஆண், பெண், குழந்தை, முதியவர்) தங்கள் குடும்ப உறுப்பினர்கள் சார்பாக வழங்க வேண்டும்.

அளவு: நபருக்கு சுமார் 2.3 கிலோ (1 ஸாஉ) அரிசி, கோதுமை, பேரீச்சம்பழம் போன்ற ஊர் உணவாக வழங்கலாம்.

நேரம்: ரமலான் ஆரம்பம் முதல் பெருநாள் தொழுகைக்கு முன் வரை வழங்கலாம். தொழுகைக்குப் பின் வழங்கினால் அது சாதாரண தர்மமாகக் கருதப்படும்.




அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

கண்ணியமிகு ஆலிம்கள் மற்றும் இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஸதகத்துல் ஃபித்ரு விபரம் :

ஹனபி :

1 கிலோ 633 கிராம் கோதுமை, அல்லது அதற்கான கிரயம். இவ்வாண்டு அதன் கிரயம் ரூபாய் 90/- என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ஷாபிஈ:

2 கிலோ 400 கிராம் கோதுமை அல்லது அரிசி பொருளாக மட்டும் கொடுக்க வேண்டும். கிரயம் கொடுக்கக் கூடாது.
இதைவிட கூடுதலாக வரும் அறிவிப்புகள் பேணுதல் அடிப்படையில் கூறப்படுபவை ஆகும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback