பாமக முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார் அன்புமணி
அட்மின் மீடியா
0
பாமக முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார் அன்புமணி
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் 23.04.2026ஆம் நாள் நடைபெறவிருக்கும் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி,
கீழ்வேளூரில் பாமக பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன்,
அம்பத்தூரில் மாநிலத் துணைத் தலைவர், கே.என். சேகர்,
செஞ்சியில் பாமக இளைஞரணித்தலைவர் கணேஷ் குமார்
ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள்.
Tags: அரசியல் செய்திகள்
