Breaking News

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்களை மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), தான் போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள பாலன் இல்லத்தில் நடைபெற்ற மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு, மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் அவர்கள் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.




தளி- ராமச்சந்திரன் 

திருத்துறைப்பூண்டி - மாரிமுத்து

ஸ்ரீ வில்லிப்புத்தூர் - மகாலிங்கம் 

திருப்பூர் வடக்கு - ரவி

பவானிசாகர் - பி‌.எல்.சுந்தரம்

ஆகியோர் போட்டியிடுகின்றனர்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback