Breaking News

பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்த நிதிஷ் குமார்

அட்மின் மீடியா
0
10 முறை முதலமைச்சராகப் பதவியேற்று சாதனைப் படைத்திருக்கும் நிதிஷ் குமார், பீகார் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார். இதன் மூலம் பாஜகவைச் சேர்ந்தவர் பிகார் முதலமைச்சராக உள்ளார்.



20 ஆண்டுகளுக்கும் மேலாக என் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வந்துள்ளீர்கள், அந்த நம்பிக்கையின் காரணமாகவே பீகார் வளர்ச்சியை கண்டுள்ளது அதற்கு என் நன்றிகள். தொடக்கத்தில் இருந்தே சட்டமன்ற, நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற ஆசை என் மனதில் இருந்தது. எனவே இம்முறை மாநிலங்களவை உறுப்பினராக விரும்புகிறேன். பீகாரில் அமையப்போகும் புதிய அரசுக்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும் - முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபின் நிதிஷ் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு.

ராஜ்யசபா தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. அதில் ஒன்றில் ராம்நாத் தாக்கூர் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ராஜ்யசபாவுக்கு போட்டியிடமனு தாக்கல் செய்துள்ளார் . 

இதனிடையே, பீஹார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் விலகினால், அடுத்ததாக பாஜவை சேர்ந்தவர் முதல்வராக பதவியேற்கலாம் என கூறப்படுகிறது. நிதிஷ்குமார் மகன் நிஷாந்த்க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback