கர்நாடகா, ஆந்திராவில் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு!
கர்நாடக முதல்வரும் நிதியமைச்சருமான சித்தராமையா இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். இதுவரை சித்தராமையா 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்து உள்ளார். இன்று 17வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார்.
கர்நாடகாவில் குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தக் கட்டுப்பாடு.. குழந்தைகள் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாவதைத் தடுக்க 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மொபைல் போன் தடை
இந்தியாவில் முதல் முறையாக 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள், மாணவ, மாணவிகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கர்நாடக மாநில அரசு கொண்டு வந்துள்ளது. 2026 - 27ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் சித்தராமையா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதை தடுக்கவும் கல்வியில் செல்போன்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் சோஷியல் மீடியாக்களை பயன்படுத்த பல்வேறு நாடுகளும் தடை விதித்து வருகிறது. இந்நிலையில், கர்நாடாகவில் சிறார்கள் சோஷியல் மீடியாக்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருக்கிறார்.
இது குறித்து பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, "அல்காரிதம்களிடம் நமது குழந்தைகளின் எதிர்காலத்தை நாம் அடகு வைக்க முடியாது. சிறுவர்கள் நிஜ உலகத்தோடு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய நேரமிது. செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தடுக்கவே இந்த தடை விதிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திரா:-
ஆந்திரப் பிரதேசத்தில், 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் சந்திரபாபு நாயுடு,
13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும் என்றும், அடுத்த 90 நாள்களில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
Tags: இந்திய செய்திகள்
