சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பெங்களூரில் நாளை முதல் ஓட்டல்கள் இயங்காது என அறிவிப்பு
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போரின் எதிரொலியாக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு.
எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் எதிரொலியாக, பெங்களூரில் நாளை(மார்ச் 10) முதல் உணவகங்கள் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரில் வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பெங்களூரில் நாளை முதல் உணவகங்கள் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
70 நாள்களுக்கு எரிவாயு விநியோகத்தில் பாதிப்பிருக்காது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தது ஆனால், திடீரென எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டது உணவக தொழிலுக்கு பேரிடியாக விழுந்துள்ளது.
எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பதால் நாளை முதல் உணவகங்கள் மூடப்பட்டிருக்கும்’ என்று பெங்களூரு உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளது.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குவதைத் தடுக்க, வாடிக்கையாளர்கள் சிலிண்டர் மறுமுறை புக்கிங் செய்வதற்கான கால அவகாசத்தை 21 நாள்களிலிருந்து 25-ஆக நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எல்பிஜி சிலிண்டர் ஒருமுறை முன்பதிவு செய்துவிட்டால் அதன்பின் அந்த வாடிக்கையாளர் அடுத்த 25 நாள்கள் கழித்தே மறுபடியும் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள்
