ஈரான் மீதான போர் நிறுத்தம் – அதிபர் டிரம்ப் அறிவிப்பு…
பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலால் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், போரை நிறுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன. இந்தச் சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோசியல்' வலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு, சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவும் ஈரானும் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் ஆக்கப்பூர்வமான மற்றும் ஆழமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் நமது பகைமைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட உள்ளது. இந்த விரிவான பேச்சுவார்த்தைகள் வாரம் முழுவதும் நீடிக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைகளின் வெற்றிக்கு வாய்ப்பளிக்கும் வகையில், ஈரானின் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து ராணுவத் தாக்குதல்களையும் அடுத்த 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப் பாதுகாப்புத் துறைக்குத் தான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Tags: வெளிநாட்டு செய்திகள்
