Breaking News

சட்டசபை தேர்தலில் ராமதாஸ், சசிகலா கூட்டணி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

சசட்டசபை தேர்தலில் ராமதாஸ், சசிகலா கூட்டணி அறிவிப்பு

சசிகலாவின் அஇபுதமமுக கட்சியும், மருத்துவர் ராமதாஸும் புதிய கூட்டணியை அமைத்துள்ளனர். சசிகலாவிற்கு தென்னந்தோப்பு சின்னம் உள்ளது. மருத்துவர் ராமதாஸ் மாம்பழம் சின்னம் தன்னுடையது என சொன்னாலும் தேர்தல் ஆணையம் அதை கொடுக்கவில்லை.

சசிகலா தனது புதிய கட்சிக்கு அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் எனப் பெயரிட்டுள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாகப் பிரிந்துள்ள நிலையில், 'மாம்பழம்' சின்னம் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் மற்றும் மருத்துவர் ராமதாஸ் இடையே மோதல் நீடிக்கிறது.

தமிழகத் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாகப் பிரதான 5 அணிகள் மோதுகின்றன. 

திமுக கூட்டணி: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 

அதிமுக - பாஜக கூட்டணி: தேசிய ஜனநாயகக் கூட்டணி 

நடிகர் விஜய் தலைமையிலான அணி தமிழக வெற்றிக் கழகம்

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 

ராமதாஸ் - சசிகலா கூட்டணி

இன்று தைலாபுரம் தோட்டத்தில் நடந்த சந்திப்பிற்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், 

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இனணந்து கூட்டணி அமைக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தின் துரோக அடையாளங்களை களைந்து மக்கள் நலனையும், தமிழகத்தின் சுயமரியாதை மற்றும் தன்னாட்சி மேம்படுத்தும் விதமாக இந்த கூட்டணி செயல்படும்.

தமிழகத்தின் துரோக அடையாளங்களை களைந்து மக்கள் நலனையும், தமிழகத்தின் சுயமரியாதை மற்றும் தன்னாட்சி மேம்படுத்தும் விதமாக இந்த கூட்டணி செயல்படும் என இருவரும் சேர்ந்து கூட்டாக அறிவித்துள்ளார்.

கூட்டணி குறித்துப் பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், 

இது ஒரு வெற்றிக் கூட்டணி. வரும் தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி போட்டியிடும். எங்களுடன் இணைய விரும்பும் பிற கட்சிகள், எங்கள் இருவருடனும் (சசிகலா மற்றும் ராமதாஸ்) கலந்து ஆலோசித்து முடிவெடுக்கலாம்," என்று அழைப்பு விடுத்துள்ளார்.ஏற்கனவே அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு அணிகளும் களம் கண்டு வரும் நிலையில், சசிகலா மற்றும் பாமக இணைந்துள்ள இந்தப் புதிய மூன்றாவது அணி, வரும் தேர்தலில் மிகப்பெரிய வாக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் இந்தக் கூட்டணியின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback