தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் லாக்-அப் டெத் வழக்கில் அனைவரும் குற்றவாளிகள் என மதுரை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் லாக்-அப் டெத் வழக்கில் அனைவரும் குற்றவாளிகள் என மதுரை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் லாக்-அப் மரணமாக மிகக் கொடூரமான முறையில் தந்தை, மகன் என இருவரையும் தாக்கியதாக பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தந்தை - மகன் கொலை வழக்கில், சுமார் 6 ஆண்டுகால நீண்ட விசாரணைக்குப் பிறகு இன்று மதுரை மாவட்ட நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் காவலில் உயிரிழந்த விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசார் மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது. ஜூன் 2020-ல் ஊரடங்கு விதிகளை மீறி கடை திறந்ததாகக் கூறி, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து அவர்கள் இருவரும் கொடூரமாகத் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்து, அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.சாத்தான்குளம் பென்னிக்ஸ் ஜெயராஜ்உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு சிபிஐ வசமானது. அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது ஜாமீன் மனுக்கள் உச்சநீதிமன்றம் வரை தள்ளுபடி செய்யப்பட்டன.
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் அனைத்து வாதங்களும் நிறைவடைந்து இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தந்தைக்கும் மகனுக்கும் காவலா்களால் தான் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்பது ஊா்ஜிதம் ஆகி உள்ளது என கூறிய நீதிபதி அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு
Tags: தமிழக செய்திகள்
