துபாயில் உள்ள சர்வதேச நிதி மையத்தை டிரோன் மூலம் தாக்கிய ஈரான்
துபாயில் உள்ள சர்வதேச நிதி மையத்தை டிரோன் மூலம் தாக்கிய ஈரான்
வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் துபாய் மீது ஈரான் மீண்டும் டிரோன் தாக்குதல்
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று அதிகாலை துபாயின் இதயப்பகுதியான சர்வதேச நிதி மையத்தை (DIFC) இலக்கு வைத்து ஈரான் காமிகேஸ் (Kamikaze) ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்த ட்ரோன்களை நடுவானில் இடைமறித்து அழித்தாலும், சிதறிய பாகங்கள் விழுந்ததில் நிதி மையத்தில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்தன. நகரின் வான்பரப்பில் அடர்ந்த கரும்புகை சூழ்ந்த நிலையில், இந்தத் தாக்குதலால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், சிறிய அளவிலான சேதங்களே ஏற்பட்டுள்ளதாகவும் துபாய் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். முன்னதாக, ஈரான் மேற்கத்திய நிதி நிறுவனங்களைத் தாக்கக்கூடும் என்ற எச்சரிக்கையால் துபாயில் உள்ள வங்கிகள் தங்கள் ஊழியர்களை வெளியேற உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நிதி மையம் (IFC) என்பது உலகளாவிய வங்கிகள், சொத்து மேலாளர்கள், பங்குச் சந்தைகள் மற்றும் நிதிச் சேவைகளின் அதிக செறிவுள்ள ஒரு நகரம் அல்லது பிராந்தியமாகும், இது சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு வலுவான, சிறப்பு வாய்ந்த மற்றும் பெரும்பாலும் வரிக்கு சாதகமான ஒழுங்குமுறை கட்டமைப்புகள் மூலம் சேவை செய்கிறது. நியூயார்க், லண்டன் மற்றும் சிங்கப்பூர் போன்ற முக்கிய மையங்கள் எல்லை தாண்டிய மூலதன ஓட்டத்தை எளிதாக்குகின்றன, பொருளாதார வளர்ச்சி மற்றும் புதுமைகளை இயக்குகின்றன
Tags: வெளிநாட்டு செய்திகள்
