தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சவுதி அரேபியாவில் சிக்கித் தவிப்பு
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சவுதி அரேபியாவில் சிக்கித் தவிப்பு
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையே தீவிரமாக நடைபெறும் மோதல் காரணமாக, தமிழக அரசின் தலைமை காஜி என்.பி. உஸ்மான் முஹ்யித்தீன் சௌதி அரேபியாவில் சிக்கியுள்ளார்.
அவர் மெக்கா புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக பிப்ரவரி 15ஆம் தேதி சென்னையில் இருந்து மெக்கா சென்றிருந்தார். அங்கு நிலவும் போர் பதற்றம் காரணமாக தாயகத்துக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது மெக்காவில் தங்கியுள்ள அவர், தமிழகத்திற்கு பாதுகாப்பாக திரும்ப உதவி கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து தமிழக அரசு தரப்பில் அவரை தொடர்புகொண்டு பேசியதாக கூறப்படுகிறது. பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான சேவை தொடங்கியவுடன் அவரை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.அணு ஆயுத ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகள் குறிவைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு சூழல் கவலைக்கிடமாக உள்ளது.
சவுதி அரேபியாவின் மெக்கா ஹஜ் புனிதப் பயணம் சென்று அங்கு சிக்கியுள்ள தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மௌலானா உஸ்மான் |முஹ்யித்தீன் பாகவியை தொடர்புகொண்டு நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.போர் சூழலால் மெக்காவில் சிக்கியுள்ள அவரை, பத்திரமாக தாயகம் அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்திகள்
