Breaking News

ஈரானில் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி தேர்வு முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஈரானில் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி தேர்வு முழு விவரம்



ஈரான் நாட்டின் உச்சத் தலைவராக மோஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஈரான் இண்டெர்நேஷனல் தகவல் வெளியிட்டுள்ளது.

மறைந்த அலி அயத்துல்லா கமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்ய நிபுணர்கள் சபை கூடினர். இடைக்காலமாக அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கமேனியின் இரண்டாவது மகன் பொறுப்பேற்கிறார் என கூறப்படுகிறது.

ஈரானின் அணு ஆயுத கொள்கைக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் காமேனி, பாதுகாப்புத்துறை மந்திரி அஜீஸ் நசீர்சாதே, ஈரான் புரட்சிக்கர ராணுவப்படை தளபதிகள் முகமது பக்பூர், செய்யது மஜித் மவுசவி, தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி ஷம்கானி உள்ளிட்ட 13 உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கூண்டோடு படுகொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஈரானின் இடைக்கால ஆட்சியாளராக அயதுல்லா அலிரேசா அராபி நியமிக்கப்பட்டார். ஈரானின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி புதிய தலைவர் தேர்வு செய்யும் வரை, இவரது தலைமையிலான கவுன்சில், நாட்டை வழிநடத்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

தற்போது அயதுல்லா கமேனியின் மகன் முஜ்தபா ஈரான் புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என ஈரான் நாட்டின் ஊடகங்கள் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

மொஜ்தபா ஹொசைனி கமேனி செப்டம்பர் 8, 1969 பிறந்துள்ளார். இவர் ஒரு ஈரானிய அரசியல்வாதி மற்றும் முஸ்லிம் மதகுரு ஆவார் . ஈரானின் முன்னாள் உச்ச தலைவரான அலி கமேனியின் இரண்டாவது மூத்த குழந்தை மொஜ்தபா கமேனி 1987 முதல் 1988 வரை ஈரான்-ஈராக் போரில் பணியாற்றினார் ,


Tags: அரசியல் செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback