நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள் அதிமுகவில் இணைந்தார்
அட்மின் மீடியா
0
அதிமுகவில் இணைந்த காளியம்மாள்!
நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்தாண்டு விலகிய காளியம்மாள் அதிமுகவில் இணைந்தார்.
சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைத்துக் கொண்டார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுகவில் சீட் கிடைக்கும் என கூறப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியிருக்கும் பிரபல பேச்சாளர் காளியம்மாள் அதிமுகவில் இணைந்தார் சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அதிமுகவில் இணைந்தார்
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள். இவரின் மேடைப் பேச்சிற்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு என்றே கூறலாம். நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு அடுத்து இருக்கும் முக்கியமான நபர்களில் ஒருவராகப் பார்க்கப்பட்டவர் காளியம்மாள். அக்கட்சியின் சார்பில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர்களில் இவரும் ஒருவராக இருந்தவர்.
குறிப்பாக கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். ஆனால், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் காளியம்மாளுக்கு இடையே பனிப்போர் நடந்து வந்தது. மேடையிலேயே காளியம்மாளை விமர்சிப்பது, அவர் பேச்சுக்கு பதிலடி கொடுப்பது என நாளடைவில் அவர்களின் பனிப்போர் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கிய நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகினார்.
அதன் பின்னர் அவர் பல்வேறு கட்சிகளில் இணையப்போவதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், எந்த முடிவையும் காளியம்மாள் வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில்தான் இன்று அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.
Tags: அரசியல் செய்திகள்