Breaking News

தாமரை சின்னத்தில் போட்டியிடவுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்தார் ஜி.கே.வாசன்.

அட்மின் மீடியா
0

தாமரை சின்னத்தில் போட்டியிடவுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்தார் ஜி.கே.வாசன்.



தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்க உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11, தமாகா 5 , ஜான் பாண்டியனின் ஐஜேகேவுக்கு 2, தமமுகவுக்கு 1, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில் தமாகா ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம். ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமாகா 6 இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த 5 தொகுதிகளிலும் பாஜகவின் தாமரை சின்னத்தில் தமாகா வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

தமாகா வேட்பாளர் பட்டியல்

ஒட்டன்சத்திரம் - விடியல் எஸ். சேகர் (தமாகா மாநில துணை தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ)

ஈரோடு மேற்கு - எம். யுவராஜா (தமாகா பொதுச் செயலாளர்)

ராணிப்பேட்டை - வி.எம். கார்த்திகேயன் (ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தமாகா தலைவர்)

கிள்ளியூர் - சைமன் (தமாகா தென் மண்டல இளைஞரணி துணை தலைவர்

கும்பகோணம் - எம்.கே.ஆர் அசோக் குமார் (தமாகா மாநில செயலாளர்)

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback