Breaking News

மாம்பழ சின்னத்தை முடக்க வேண்டும் என்ற ராமதாசின் மனு தள்ளுபடி

அட்மின் மீடியா
0

மாம்பழ சின்னத்தை முடக்க வேண்டும் என்ற ராமதாசின் மனு தள்ளுபடி 

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பெயர், கொடி மற்றும் மாம்பழம் சின்னம் தொடர்பாக நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நீண்டகாலமாக சட்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அன்புமணி தரப்புக்கு ஆதரவாக முடிவெடுத்திருந்த நிலையில், சின்னத்தை முடக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு இன்று (மார்ச் 26) சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தர்மபிரபு, “தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்ட நிலையில், இந்த வழக்கில் தலையிட விரும்பவில்லை” என்று கூறி, மாம்பழ சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸின் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். 


Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback