Breaking News

விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை வழக்கு முக்கிய குற்றவாளி கைது..!!

அட்மின் மீடியா
0

விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி கடந்த 10ஆம் தேதி காணாமல் போன நிலையில், அடுத்த நாள் 11ஆம் தேதி பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ வழக்கில் தனியார் பள்ளி முதல்வர் கைது

இக்கொலை வழக்கில் இன்றுடன் 9 நாட்களாகியும் குற்றவாளியை போலீசார் கண்டுபிடிக்காத நிலையில், மாணவியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வருகின்றனர். காவல்துறை சார்பில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பலரிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டான்.. 

இவன் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது.இது குறித்து நெல்லை சரக டிஐஜி சரவணன் கூறுகையில், ''இந்த வழக்கில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 3 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது'' என்றார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback