வதந்திகளை நம்ப வேண்டாம்! பெட்ரோல், சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசு விளக்கம்!
வதந்திகளை நம்ப வேண்டாம்! பெட்ரோல், சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசு விளக்கம்!
ஈரான் - இஸ்ரேல், போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே பரவி வரும் நிலையில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் சூழலால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளை மத்திய அரசு மறுத்துள்ளது.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில்,
சமையல் எரிவாயு விநியோக மையங்களில் தட்டுப்பாடு ஏதுமில்லை. போதுமான அளவு சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளன. நேற்று மக்கள் பீதி காரணமாகக் கூடுதலாக முன்பதிவு செய்துள்ளனர், ஆனால் விநியோகம் சீராகவே உள்ளது. வாகன எரிபொருட்களுக்கும் எந்தத் தடையும் இல்லை. விநியோகச் சங்கிலி சாதாரணமாகவே உள்ளது. குழாய் வழி எரிவாயு விநியோகம் 100% உள்நாட்டு நுகர்வோருக்காக உறுதி செய்யப்பட்டுள்ளது.புவிசார் அரசியல் சூழலைச் சாதகமாக்கிக் கொண்டு சில சமூக விரோதிகள் பரப்பும் வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம். எரிபொருள் இருப்பு குறித்து அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
