இனி இவர்களுக்கும் தபால் ஓட்டு போடலாம் ! தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இனி இவர்களுக்கும் தபால் வாக்கு ! தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடாத ஆனால் விடுப்பு எடுக்க முடியாத அத்தியாவசியத் துறை பணியாளர்களும் தபால் வாக்கு செலுத்தலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழகம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், மின்வாரியப் பணியாளர்கள், போக்குவரத்துக் காவல் மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்கள், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத் துறை பணியாளர்கள் தபால் வாக்கு செலுத்தலாம்.
இத்துறைகளில் பணியாற்றுவோர், தங்களது தொகுதியில் தபால் வாக்கு கோரி படிவம் 12D (Form 12D) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்த மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இதற்கான சிறப்பு மையங்களை அமைப்பார்கள்
தபால் வாக்கு அளிப்பது எப்படி? யாரெல்லாம் தபால் வாக்கு அளிக்கலாம் முழு விபரம்
https://www.adminmedia.in/2026/03/blog-post_45.html
அரசு துறைகளின் பணியாளர்கள்தேர்தல் தினத்தன்று அத்தியாவசியப் பணிகளில் இருப்பதால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியாமல் போகிறது. இதைத் தவிர்க்கவும், வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தபால் வாக்கு கோருபவர்கள் தேர்தல் தேதிக்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்பே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
.தமிழகத்தில் சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமான போக்குவரத்து மற்றும் மின்வாரியத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களின் வாக்குகள் பல தொகுதிகளில் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதால், அரசியல் கட்சிகள் தற்போது இந்தத் துறை பணியாளர்களைக் கவரத் தனித்தனியான வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்