கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது தாக்குதல் நடத்திய ஈரான் வீடியோ
கத்தாரின் ராஸ் லஃபான் தொழில்துறை நகரத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. தீயணைப்பு குழுக்கள் தீயை கட்டுப்படுத்தி வருகின்றன.
கடந்த 2 நாள்களில் ஈரானின் முக்கிய தலைவர்களான தேசிய பாதுகாப்புச் செயலாளர் அலி லார்ஜானி உள்பட மூவர் அமெரிக்காவால் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே, ஈரானின் தெற்கு பார்ஸில் உள்ள எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், புதன்கிழமை ஒரே நாளில் வளைகுடாவின் 9 நாடுகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலையான ராஸ் லஃபான் தொழில் நகரம் மீது பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் மிகப்பெரிய சேதமடைந்திருப்பதாகவும் கத்தார் அரசு தெரிவித்துள்ளது.
ராஸ் லஃபான் ஆலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/SattarFarooqui/status/2034423415881498762
Tags: வெளிநாட்டு செய்திகள்
