Breaking News

தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய் பேசியது என்ன முழு விபரம் இதோ

அட்மின் மீடியா
0

தஞ்சாவூரில் வெக தலைவர் விஜய் பேசியது என்ன முழு விபரம் இதோ

தஞ்சாவூரில் செங்கிப்பட்டி பகுதியில் தவெக நிர்வாகிகள் மத்தியில் தவெக தலைவர் விஜய் பேசினார்

சின்னப் பிள்ளைகள் எல்லாம் சொல்கிறார்கள். ஓம் சக்தி, பராசக்தி.. திமுக ஒரு தீய சக்தி. 




திமுக என்பது வொர்க் அவுட் ஆகாது. எனக்கும் என் மக்களுக்கும் இடையில் யாராலும் நுழைய முடியாது. தமிழ்நாடு வெர்சஸ் ஸ்டாலின், விஜய் வெர்சஸ் ஸ்டாலின் என்றுதான் களம் இருக்கிறது.

சென்னையில் தில்லி தில்லி எனக் கூறுகிறார்கள், ரைடு வந்தால் தில்லிக்கு வெள்ளை கொடி பிடிக்கிறார்கள்.கிரிக்கெட்டில் விசில் போடுவது சிஎஸ்கே, தேர்தலில் விசில் போடப் போவது தவெக. அனைத்து அணிகளையும் திமுக அடித்து நொறுக்கும்.எனக்கும் என்னுடைய மக்களுக்கு நடுவில் யாராலும் நுழைய முடியாது. அம்மா பையன், அப்பா பையன், அண்ணன் தங்கை, அக்கா தம்பி உறவு. இது ஆழமான உறவு என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருப்பார்கள். 

மற்றவர்கள் இது தேர்தல், ஆனால் எனக்கும் என்னை நேசிக்கும் மக்களுக்கு இது எமோஷன்.இந்த விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்கள்தானே? நிஜமாகவே ஒரு வாய்ப்பு அளிப்பீர்கள்தானே.. விஜயை நம்புகிறீர்கள்தானே. ஒவ்வொரு வீட்டிலும் விசில் சத்தம் கேட்கும்தானே?’’ 

விவசாயிகளுக்கு உரத்தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வோம்.விவசாயத்திற்கு எதிரான எந்த திட்டமாக இருந்தாலும் தவெக ஆட்சி நிராகரிக்கும்.நெல் மூட்டைகள் பாதுகாப்பில் முக்கிய திட்டங்கள் வகுக்கப்படும். வேலை வாய்ப்பை உருவாக்குவோம்" 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் வேளாண் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி ..5 ஏக்கருக்கு அதிகமாக வைத்துள்ள விவசாயிகளின் பயிர் கடனை 50 சதவீதம் தள்ளுபடி குறித்து ஆலோசனை செய்யப்படும்.

இரண்டு ஏக்கருக்கு குறைவானவர்களின் பிள்ளைகளின் கல்வி செலவை அரசு முழுமையாக ஏற்கும்..கல்வி ,மருத்துவம் ,ரேஷன் ,பஸ் வசதி போன்ற அடிப்படை விஷயங்களுக்கு மட்டுமே அரசு முக்கியத்துவம் தரும் .நமது குழந்தைகள் நமது இளைஞர்களின் வாழ்க்கைக்கு முன்னுரிமை தரப்படும். 

அரசு வேலை வாய்ப்பு மட்டுமின்றி தனியார் வேலை வாய்ப்புகளுக்கும் வாய்ப்பு தரப்படும் .நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் கமிஷன் இருக்காது.500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு ரேஷன் கடை அமைக்கப்படும். பெண்களுக்கு பெண் எடையாளர். ஆண்களுக்கு ஆண் எடையாளர் பணியாற்றுவர்.நியாயவிலைக் கடைகள் பொருட்கள் அனைத்தும் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் என்றார்

ஒண்ணு நீ... இல்லன்னா நான்... நம்மை தாண்டி யாரும் வந்துவிடக் கூடாது... நாம் மாறி மாறி ஆட்சிக்கு வந்துவிடலாம் என நினைத்தோம். விஜய் வந்ததால் நமக்கு தொல்லை. மக்கள் வேறு அவனைத்தான் நம்புகிறார்கள். அதனால், நீ விதிமுறைகள் விதிமுறைகள் எனப் போட்டு அவனை தடுத்துவிடு. நானும் பழி மேல பழி போட்டு அவனை தடுக்குறேன் என பேசி வைத்துக் கொண்டு பிரச்னை கொடுக்கிறார்கள். 

பூசி மெழுகி பட்டும் படாமல் ஜனநாயகன் படத்திற்கு குரல் கொடுத்த முதல்வருக்கு நன்றி,

எனக்கு அடுத்த ஜென்மம், மறுபிறவி பற்றியெல்லாம் தெரியாது. அது உண்மை என்றால் அடுத்ட ஜென்மத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன். விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதை முழுமூச்சாக தவெக எதிர்க்கும்.

பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிரான எந்தவொரு திட்டத்தையும் நிறைவேற்ற மாட்டோம். வேளாண் பயிர் கடன் ரத்து 5 ஏக்கர் கீழ் வைத்திருப்பவர்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு 50 சதவீதம் கடன் ரத்து செய்யப்படும்” 

வேலூரில் பேசும்போது தமிழ்நாடு தான் விஜய்.. விஜய் தான் தமிழ்நாடு” என சொன்னேன். விஜய் vs ஸ்டாலின் சார் என சொன்னேன். மக்களின் உண்மையான ஒரே பிரதிநிதி என்பதால் அப்படி சொன்னேன். கிரிக்கெட்டில் கூட தமிழ்நாடு அணியை, டெல்லி அணியால் தொட்டுக்கூட பார்க்க முடியாது. கிரிக்கெட்டில் சிஎஸ்கேவுக்கு எப்படி விசில் போடுவோமா, அதேபோல் தவெகவுக்கு விசில் போட போறாங்க.

தமிழ்நாட்டை காப்பாற்றுவது மு.க.ஸ்டாலின், திமுக என்பதெல்லாம் இனி ஒர்க் அவுட் ஆகாது. எனக்கும், மக்களுக்கும் நடுவில் யாராலும் நுழைய முடியாது. வீட்டுக்கு வீடு விஜய் என்பது இந்த தேர்தலில் 100 சதவிகிதம் உறுதியாகும். அடுத்த ஜென்மத்தில் நான் விவசாயி குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன். நானும் டெல்டா காரன் என யார் காதிலும் டால்டா ஊற்ற வரவில்லை” என விஜய் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கடன் வாங்கி திமுக ஆட்சி குப்புறப்படுத்து விட்டது. விவசாயிகளுக்காக ஒரு போராட்டத்தில் கூட கலந்து கொள்ளவில்லை.அவர்களை குண்டாஸ் சட்டத்தில் போட்டது திமுக. மணல் மாஃபியா குடும்பத்திற்கு திமுக அரசு தான் உறுதுணையாக இருந்து வருகிறது. ஆட்சியின் கடைசி காலத்தில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது ஏன் என கேள்வியெழுப்பிய விஜய், தவெக ஆட்சிக்கு வந்தவுடன் மிகப்பெரிய திட்டங்கள் உடனுக்குடன் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

தவெக ஆட்சிக்கு வந்ததும் உரத்தட்டுப்பாடு இருக்காது, 5 ஏக்கர் நிலம் உள்ள விவசாயிகளின் பயிர்க்கடன்முழுமையாக ரத்து செய்யவும், 5 ஏக்கருக்கு மேல் 50% ரத்து செய்ய சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். நிலமற்ற விவசாயிகள் குடும்பத்தில், குழந்தைகளின் பொறியியல், மருத்துவ செலவை அரசே ஏற்கும்.நெல் மூட்டைகள் முறையாக பாதுகாக்கப்படும். கொள்முதல் நிலைய வசதிகள் ஏற்படுத்தப்படும்" என்றார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/watch?v=ByZlCrqZdZ0

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback