Breaking News

திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா காங்கிரஸ்? முழு விவரம்

அட்மின் மீடியா
0

திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா காங்கிரஸ்? முழு விவரம்



2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக திமுக தொகுதிப் பங்கீடு குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி தலைமையில், காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. 

காங்கிரஸ் கட்சி சார்பில் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கூடுதல் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா இடத்தை காங்கிரஸ் கேட்பதாகக் கூறப்படும் நிலையில் தேமுதிக, பன்னீர்செல்வம் வருகை உள்ளிட்ட காரணங்களால் காங்கிரஸ் கேட்கும் எண்ணிக்கையைக் குறைக்க திமுக திட்டமிட்டுள்ளது.

25 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் மட்டுமே தர திமுக முடிவு செய்துள்ளது. 25 இடங்கள் என்பதை ஏற்க முடியாது என காங். மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேட்டி அளித்துள்ளார் குறைந்தது 35 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அப்படி கொடுக்கவில்லை என்றால் கூட்டணியில் இருந்து வெளியேறவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதேசமயம் நாளைக்குள் முடிவு செய்யவில்லை என்றால் தொகுதிப் பங்கீட்டு அறிவிப்பை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளது.

திமுக- காங்கிரஸ் கூட்டணியில் முடிவு எட்டப்படாத நிலையில், திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் கட்சிக்கு நாளை(மார்ச் 03) மாலை வரை கெடு எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback