Breaking News

சவுதி அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்திய ஈரான்

அட்மின் மீடியா
0

 சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்திய ஈரான்



சவூதி அரேபியாவின் செங்கடல் பகுதியில் யான்பு துறைமுகத்தில் அமைந்துள்ள SAMREF எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் டிரோன் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

சவூதி அராம்கோ மற்றும் எக்ஸான் மொபில் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இந்த ஆலை இயங்கி வருகிறது.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள பல எண்ணெய் நிலையங்களை காலி செய்யுமாறு ஈரான் எச்சரித்தது. இதில் SAMREF நிலையமும் ஒன்றாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஈரான் ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டதால், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய இருக்கும் ஒரே வழித்தடம் இந்த யான்பு துறைமுகம் மட்டுமே.

தற்போது யான்பு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் கடும் உயர்வை ஏற்படுத்தக்கூடும்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback