Breaking News

தமிழகத்தில் குடிநீர் கேன் விலை திடீர் உயர்வு..! கட்டண விவரம்

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் குடிநீர் கேன் விலை திடீர் உயர்வு..!

தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் சங்கம் 20 லிட்டர் குடிநீர் கேன்களின் விலையை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 




அறிவிப்பின்படி, ஒரு 20 லிட்டர் குடிநீர் கேனின் விலை அதன் தற்போதைய விற்பனை விலையிலிருந்து 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது. இந்த விலை மாற்றம் உடனடி அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த வாரம் வரையில் ரூ. 8-க்கு விற்கப்பட்ட 200 மி.லி. குடிநீர் பாட்டில் இன்று ரூ. 10-க்கும், 

ரூ.10-க்கு விற்கப்பட்ட 300 மி.லி. குடிநீர் பாட்டில் ரூ. 12-க்கும், 

ரூ.12-க்கு விற்கப்பட்ட 500 மி.லி. குடிநீர் பாட்டில் ரூ.16-க்கும், 

ரூ. 20-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பாட்டில் ரூ.25-க்கும், 

ரூ. 30-க்கு விற்கப்பட்ட 2 லிட்டர் பாட்டில் ரூ.35-க்கும், 

ரூ. 50-க்கு விற்கப்பட்ட 5 லிட்டர் பாட்டில் ரூ. 70 என்ற அளவிலும் உயர்ந்துள்ளது.

மீண்டும் பயன்படுத்தக்கூடிய கேன்களில் அடைக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் ரூ. 45-ல் இருந்து ரூ. 55-க்கு உயர்த்தப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback